சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

காலத்தின் பிரதியாக கவிதை

26 மார்ச், 2016


சித்தாந்தன்

நிகழ்காலத்தின் பிரதியாக இருக்கும் கவிதை, எவ்வாறு கடந்த காலத்தினதும் எதிர்காலத்தினதும் சான்றாகச் செயற்படுகின்றது என்பதை கோட்பாட்டு நிலையில் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. கவிதையில் 'காலம்' என்ற பிரக்ஞை எந்தளவுக்கு அர்த்தபு+ர்வமாக முழுமை பெறுகின் றது. கவிதையில் எதிர்காலம் என்பது ஒரு அதி புனைவாகவேபடுகின்றது. அதாவது மாய யதார்த்தத்தின் மீது நுட்பமாகக் கட்டமைக்கப்படும் சொல்லடுக்காகும். ஒரு கவிஞன் ஒரு போதும் தீர்க்கதரிசியாக முடியாது. ஆனால் அவன் தீர்க்கதரிசனமான வரிகளை எழுதியவனாகக் கொண்டாடப் படுகின்றான். புனைவில்/ கவிதையில் இழையோடும் அருவமனம் காணும் கனவு, சில வேளைகளில் எதிர்பார்க்கையாக ஒலிக்கின்றது. உண்மையில் இது ஒரு வாய்ப்புப் பார்க்கும் சந்தர்ப்பமே. எதிர்பார்க்கை பலிக்கும் போது கவிஞன் உன்னதமாக்கப்பட்டுக் கொண்டாடப்படுகின்றான்.

கவிஞன் தன் எதிர்பார்க்கையை தன் ஆழ்மனத்தின் விருப்பு வெறுப்புக்கமையவே கட்டமைக்கின்றான். தான் சார்ந்த சமூக, அரசியல், அமைப்பு என்ற வகையில் இது பெரும்பாலும் அமைந்துவிடுகின்றது.
நிலாந்தன், தன் மண்பட்டினங்கள் தொகுதியில் இவ்வாறு எழுதுகின்றார்.

அன்பான பெருங்கடலும்
ஆதரித்த பெருங்காடும்
இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே
சில தீர்க்கதரிசிகள் மட்டும்
தெரிந்து வைத்திருக்கும்
ஒரு நாளிலே

யாழ்ப்பாணமே!!.!! யாழ்ப்பாணமே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்
கிளிநொச்சியே!!. !! மணலாறே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்

(மண்பட்டினங்கள்)

ஓட்டமாவடி அறபாத், தனது 'வேட்டைக்குப் பின்' தொகுதியில்
வரி தந்தோம் (தருகிறோம்)
நீவீர்பயந்தொதுங்கி வந்தபோது
இடம் தந்தோம்.
உயிர் தந்து விடுதலைக்காய்
உருக்குலைந்தோம்
எமக்கென நீர் எது தந்தீர்
வீரர்காள்
இதோ
அநீதி இழைக்கப்பட்ட
என்னினத்தானின் சாபம்
உமை நோக்கி எழுகிறது.
நிச்சயம் ஓர்நாள் அது
உம் விடுதலையை பொசுக்கும்.”

(சாபம்)

என எழுதுகின்றார். இது இரண்டும் இருவகையான எதிர்பார்க்கைகள். இரண்டுமே இருவரது மனநிலை சாh;ந்த எதிர்பார்க்கைகள். நிலாந்தன், தன் நம்பிக்கைகளின் வழி கட்டமைக்கும் எதிர்பார்க்கையும் அறபாத், ஏமாற்றங் களின் வழி கட்டமைக்கும் எதிர்பார்க்கையும் இருவேறானவை. அறபாத் ஒரு வகையில் சாபத்தின் குரலில் அந்த வரிகளை எழுதியிருக் கின்றார். அறபாத், தான் அறமெனக் கருதுபவை மீது கட்டமைத்திருக்கும் வரிகளவை. ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சி அறபாத்தின் எதிர்பார்க்கை பலித்துவிட்டதாகக் கருத இடந்தருகின்றது.

 நிலாந்தனின் கவிதையில் எதிர்பார்க்கை பொய்த்துவிடுகின்றது. கட்டமைக் கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து சிதறும் போது நம்பிக்கையீனத்தின் பெருவெளியில் கவிஞனின் வார்த்தைகளே எரிநட்சத்திரங்களாக உதிர்கின்றன. நிலாந்தனின் நம்பிக்கை அவரின் ஆழ்மனத்தின் விருப்பினடியாக உருப்பெற்றது. எனினும் வீழ்ச்சி என்பது அவரின் அகவிருப்புக்கு அப்பாற்பட்டது.

கவிதையில் அகவிருப்புக்கு அப்பாற்பட்ட காரணிகளின் தாக்கம் எப்படிச் செல்வாக்குச் செலுத்துகின்றதென்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. உண்மையில் நிலாந்தன், அறபாத்  இருவரின் கவிதைகளிலும் அக விருப்பின் கூறுகளே மேலோங்கி நின்றபோதும், நிலாந்தனின் கவிதையில் அது பொய்த்துப்போய் விடுகின்றது. ஆனாலும் கவிதை கவிதையாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது. அது நிகழ்காலம் சார்ந்த அகவிருப்பின் கவிதை. அது நிகழ்காலத்தின் கூறுகளையே பிரதிபலிக்கின்றது. கவிதை காலத்தின் திரண்ட வடிவமாக அல்லது காலத்தின் பிரதியாக தன்னைப் பிரகடனம் செய்யும் போது, காலத்தின் அருவக் குணங்களையும் காலத்தின் தோற்ற நிலைகளையும் தவிர்க்க முடியாது உள்வாங்கிவிடுகின்றது. இது கவிதையில் தவிர்க்க முடியாமல் நிகழும் ஒரு வகையான வேதியல் மாற்றந்தான்.

கவிதையின் பிரத்தியேகமான கூறுகளில் ஒன்று, அதன் அருவ அசைவாகும். சொற்களின் வீரியம் துருத்தும் இடங்களிலும் அமிழும் தருணங்களிலும் கவிதை மொழியின் உச்சமான கலையை நிகழ்த்துகின்றது. கவிதையை, கோட்பாட்டின் சட்டங்களால் சிறைப்படுத்தும்போது, அறிவின் தலையீடு அதிகமும் நிகழுகின்றது. யதார்த்தம், மீயதார்த்தம்  அல்லது அதியதார்த்தம் போன்ற சொல்லாடல்கள் யாவுமே கவிதைக்குப் புறம்பாக நிகழும் அறிவுச் செயற்பாடுகளேயாகும். ஆனால் கவிதை வாசிப்பு என்பது கவிதையின் அகவழி நிகழ்வது அது ஒத்த அல்லது நேரான அல்லது முற்றிலும் மாறுபட்ட, எதிரான அனுபவங்களாலானது. இது கவிஞனுக்கும் வாசகருக்கும் இடையிலான அருவத்தொடர்பின் வழி நிகழ்வது. தவிரவும் கவிஞனுக்கும் சமூகத்துக்குமான இருப்பின் ஊடாட்ட விளைவும் இதுதான். இதனால்தான் 'மகாகவிஎன கொண்டாடப்படுவோரின் கவிதைகளுக்கு தீர்க்க தரிசன முலாம் பு+சப்படுகின்றது.

கவிதை உட்பட எந்த இலக்கியப்பிரதிக்கும் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் என்ற ஒன்றில்லை. இலக்கியத்துக்கு அது சாத்தியமும் இல்லை. தேவையுமில்லை. அதனால்தான் இலக்கியங்களில் மீறல்கள் சாத்தியமா கின்றன. காலத்தின் பிரதிகளாக இயங்கும் இலக்கியப்பிரதிகள் காலத்தை மீறி நிற்பதற்கு அது, தன்னை நிகழ்காலத்தின் பிரதியாக பேணுவதற்கான சாத்தியங்களுக்கு இடம் வழங்குவதேயாகும். நிகழ்காலத்தின் பிரச்சினை கள் கடந்த காலத்தின் நீட்சியாக அமையும் போது, அப்பிரச் சினைகளைப் பேசும் இலக்கியங்களும் நிகழ்காலத்தின் பிரதிகளாகின்றன. கவிதை நிகழ்காலத்தின் ஜீவிதமாகவே எப்போதும் இருந்துவிடுகின்றது.
                                                                                                          
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்